search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடையில் தீ விபத்து"

    மார்த்தாண்டத்தில் நள்ளிரவில் திடீரென பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் சதி வேலை காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குழித்துறை:

    மார்த்தாண்டம் வடக்கு தெருவில் மது விலக்கு போலீஸ் நிலையம் உள்ளது. மது விலக்கு போலீஸ் நிலையம் எதிரே சந்திரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடை உள்ளது. இங்கு குளிர்பானங்கள் மற்றும் ஸ்டேசனரி பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது.

    சந்திரன் நேற்று இரவு வியாபாரம் முடிந்தபின்னர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் இந்த கடையில் இருந்து கரும் புகை வந்தது. சிறிது நேரத்தில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதற்கிடையே கடை தீப்பிடித்து எரிவதை அறிந்து கடை உரிமையாளர் சந்திரனும் அங்கு வந்தார். 

    அவர் கடையில் திடீர் என ஏற்பட்ட தீ விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி வேலை காரணமா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×